(Video) இருபதாவது திருத்தச் சட்டம் பற்றி சகல மக்களும் தெளிவுடன் இருக்க வேண்டும்: சிப்லி பாரூக்

0
274

நாட்டிலே நல்லாட்சி மலர்ந்து ஐந்து மாதத்திற்குள் மிக அவசரமாக யாப்பு சீர்திருத்தமானது 1978ம் ஆண்டிற்கு பிற்பாடு திடீரென இந்த அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கின்றது. இது பெரும்பான்மை சமூகத்தினருக்கு 95 வீதத்திற்கு மேல் சாதகமான விடயமாக காணப்படுக்கின்றது.

அந்த வகையில் பெரும்பான்மை சமுகத்தினரை பிரதிநிதித்துவபடுத்துகின்ற பாராளுமன்ற பிரதி நிதிகளினால் இவ்விடயம் சம்பந்தமாக அளட்டிக்கொள்ள வேண்டிய தேவைகள் ஏற்படாது என்பது இங்கு புலப்படும் விடயமாக உள்ளது.

ஆனால் சிறுபான்மை மக்களை பொறுத்தமட்டில் அதிலும் முக்கியமாக தமிழ் பேசுகின்ற வடகிழக்கில் வாழுகின்ற முஸ்லிம் சமூகமானது இருபதாவது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்படுகின்ற ஒவ்வொரு விடயத்தினையும் தெளிவுடன் அக்குவேறு ஆணிவேராக ஆராய்வது மட்டுமல்லாமல் எமது சமூகத்தினை பிரதி நிதித்துவப் படுத்துகின்ற பொது நிறுவனங்கள், மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், ஆட்சியில் பங்கேற்றிருக்கின்ற அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களெல்லாம் அரசியல் மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகளை புறம்தள்ளி வைத்து விட்டு ஒற்றுமைப்பட்டு முன்மொழியப்பட்டுள்ள திருத்தச்சட்டம் சம்பந்தமான தெளிவினை பெற்று அத்தெளிவினை மக்களுக்கு தெளிவாக்க வேண்டும் என நேற்று 31.01.2016 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் அமைந்துள்ள மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கின் காரியாலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்த்திப்பின் பொழுது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தினை தெரிவித்த சிப்லி பாரூக், எமது மக்களுடைய தலையெழுத்தினை தீர்மாணிக்க இருக்க இருபதாவது யாப்புச் சீர்திருத்தமானது சிறுபான்மை மக்களுக்கு எவ்விதமான பாதிப்பினையும் ஏற்படுத்தாத வகையில் அமையப்பெற்றிருக்க வேண்டும் என்பதிலும் அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்ற விடயத்தில் எமது சமூகத்தினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற நான் மேற்கூறிய அமைப்புக்கள் ஒரே கருத்துடன் செயற்படுவது மிக முக்கியமான விடயமாகும்.

அத்தோடு வடக்கு மாகாண சபையும், கிழக்கு மாகாண சபையும் இவ்விடயத்தில் தெளிவினை பெற்று யாப்பு சீர்திருத்த வரைபிற்கு பூரண ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற பிரேரணையினை எதிர்வருகின்ற 23ம் திகதி மாகாண சபையில் சமர்பிக்க இருப்பதோடு மக்களையும் விழிப்புணர்வு படுத்த வேண்டிய தேவைப்பாடும் அதிகம் இருக்கின்றது.

நாங்கள் கொழும்பிலே கூடி கலைந்து செல்வதனையும் விட சகல இடங்களிலும் உள்ள அடிமட்டங்களுங்குச் சென்று இவ்விடயம் சம்பந்தமாக பூரண தெளிவினை மக்களுக்கு அளிக்க வேண்டிய கடமைப்பாடு ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் இருக்கின்றது.

வடகிழக்கில் அதிகம் தமிழ் மக்கள் பாதிக்கப்படிருந்தாலும் முஸ்லிம் மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதனை இந்த யாப்புச் சீர்திருத்ததில் முக்கியமாக உள்வாங்கப்பட்டு முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகள், உரிமைகள் என்பன பாதிக்கபடாதவகையில் திருத்தச்சட்டமானது உருவாக்கப்பட வேண்டும்.

நல்லாட்சி ஏற்பட்டதற்கு பிற்பாடும் வடகிழக்கில் வாழுகின்ற தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு இன்னும் சந்தோசப்படக் கூடிய வகையில் எந்த தீர்வுகளும் நிறைவேற்றப்படவில்லை. அத்தோடு இரண்டாவது முறை மஹிந்த ராஜபக்ஸ்ச தெரிவு செய்யப்படுகின்ற பொழுது இவ்வாறுதான் மிக அவர அவசராமாக 18வது திருத்தச் சட்டத்தினை பாராளுமன்றத்தில் சமர்பித்து மக்கள் விளங்கிக் கொள்வதற்கு முன்பாகவே அமுலுக்கு கொண்டுவந்தார். அந்த வகையிலேதான் இந்த இருபதாவது திருத்தச்சடத்தினை பார்க்கின்ற பொழுது எங்களுக்கு சந்தேககண் கொண்டு பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

அதோடு இன்று 01.02.2016 திங்கட்கிழமையிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, காத்தான்குடியினை அண்டிய தமிழ் கிராமங்கள், ஏராவூர் , கல்குடா போன்ற பிரதேசங்களில் உள்ள அணைத்து வீதிகளுக்கும் கிழமையில் மூன்று நாட்களை செலவளித்து வீதிகளில் உள்ல சகல குடும்பங்களின் காலடிக்கு சென்று அவர்களுக்கு இருக்கின்ற அடிப்படை பொருளாதார பிரச்சனைகள், அரசியல் பிரச்சனைகள், கல்வி கல்வி சாரா பிரச்சனைகள், சமூக பிரச்சனைகள், அபிவிருத்தி சம்பந்தமான பிரச்சனைகள், அடிப்படை உரிமை சம்பந்தமான பிரச்சனைகள், காணிபிரச்சனைகள், மற்றும் வடிகான் வீதிப் போக்குவரத்து பிரச்சனைகளை நேரடியாக கல்ந்துரையாடி கண்டறிந்து கொள்வதோடு, ஏற்படுத்தப்படிருக்கின்ற நல்லாட்ச்சி சம்பந்தமாக ஒவ்வொருத்தரும் எவ்வாறான நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பதனை விளங்கிக்கொள்ளும் விடயமாகவும் இதனை கையில் எடுக்கும் அதே நேரத்தில் மொன்மொழியப்பட இருக்கின்ற இருபதாவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகவும் மக்களுடன் தனிப்பட்டமுறையில் கலந்துரையாடப்படும் என தெரிவித்தார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்.

சிப்லி பாரூக் இருபதாவது திருத்தச் சட்டம் மக்களை தெளிவுபடுத்தும் முகமாக நடாத்திய ஊடகவியலாளர் சந்த்திப்பின் காணொளியானது எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அஹமட் இர்ஸாட்

LEAVE A REPLY