இலங்கையின் சில மருத்துவர்களுடன் இணைந்து இஸ்ரேலிய முகவர்கள் சிறுநீரக வர்த்தகம்

0
215

இலங்கையின் சில மருத்துவர்களுடன் இணைந்து இஸ்ரேலிய முகவர்கள் சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் வெளிச்சமாகியுள்ளது.

2012ம் ஆண்டு இஸ்ரேலிய நீதிமன்ற அறிக்கையில் அந்நாட்டு முகவர்களுக்கும் இலங்கையின் சில மருத்துவர்களுக்கும் இடையில் சிறுநீரக வர்த்தகம் தொடர்பிலான தொடர்பு பேணப்பட்டமை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த 65 வயதான ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான எட்வட் சான்டலர் என்ற நபர் சட்டவிரோத சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸைச் சேர்ந்த 83 வயதான மோட்டார் வாகன விற்பனைப் பிரதிநிதி ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய 175000 அமெரிக்கா டொலர்களையும், இஸ்ரேலைச் சேர்ந்த டொரின் என்ற பெண்ணுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய 200,000 அமெரிக்க டொலர்களையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த இரண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளையும் இலங்கையில் மேற்கொள்வதாக குறித்த இஸ்ரேலிய முகவர் இருவருக்கும் உறுதியளித்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதற்காக இலங்கை வருவதற்கு முன்னதாக குறித்த முன்னாள் இராணுவ அதிகாரியை இஸ்ரேலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனையும் விதித்துள்ளது.இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை நடாத்துவதற்காக இந்தியாவைத் தவிர, இஸ்ரேல் மற்றும் உக்ரேய்ன் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் வந்துள்ளனர்.

-ET-

LEAVE A REPLY