நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கத்திலே பொது மக்களும் தங்களது மன நிலையில் மாற்றத்தினை கொண்டுவர வேண்டும் :அமீர் அலி

0
175

மாற்றத்தின் மூலம் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கத்திலே பொது மக்களும் தங்களது மன நிலையில் மாற்றத்தினை கொண்டுவர வேண்டும் என்று கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வாதார பொருட்களை கையளிககும் நிகழ்வு நேற்று பிரதேச செயலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த அரசாங்கத்தை அமைப்பதற்காக பொது மக்கள் வீதியில் இறங்கியது போன்று தங்களுக்குள்ளும் மாற்றம் வர வேண்டும் என்று ஒவ் வொருவருக்கும் வைராக்கியம் இருக்க வேண்டும். தான் செய்யும் தொழிலில் சிறந்து விழங்க வேண்டும் என்று அவ்வாறு உங்களுக்கு வைராக்கியம் இல்லை என்று சொன்னால் ஒவ்வொரு வருடமும் இவ்வாறான பொருட்களை எதிர்பார்ப்பவர்கலாக இருப்பதோடு எதிர்பார்ப்பவர்களது தொகையும் அதிகரித்தே காணப்படும்.

இந்த முறை பொருட்களை பெறுபவர்கள் இதன் மூலம் தொழில் செய்து அடுத்த வருடம் தான் பொருளாதார ரீதியில் வளர்ந்து விட்டோம் என்று தங்களது திவிநெகும முத்திரைகளை திரும்பி கொடுக்கின்றவர்களாக திகழ வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் திவிநெகும் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணலிங்கம், பிரதி அமைச்சரின் இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 125 திவிநெகும பயனாளிகளுக்கு திவிநெகும திணைக்களத்தின் அனுசரனையில் அறுபத்தி நாலு லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கையளிக்கப்பட்டது.

வாழைச்சேனை நிருபர்

5d9115ac-4a48-4979-8c9c-74c34e69f184 67b393ef-de9f-40fa-a77e-0d5b64331d8b b68430a5-01e1-4026-bce4-cb023a8b3572

LEAVE A REPLY