துருக்கியில் அகதிகள் படகு மூழ்கிய விபத்து: பலி எண்ணிக்கை 37ஆக உயர்வு

0
155

சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் உள் நாட்டு போர் நடைபெறுவதால் அங்கு வாழ வழியற்ற மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர். அனுமதி பெறாத படகுகளில் அதிக அளவில் பயணம் செய்யும் இவர்கள் நடுக்கடலில் மூழ்கி தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர். இச்சம்பவங்கள் துருக்கி மற்றும் கிரீஸ் கடல் பகுதியில் அடிக்கடி நடைபெறுகிறது.

தற்போது இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. அதிக எண்ணிக்கையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஒன்று துருக்கி கடல் பகுதியில் கிரீஸ் நாட்டின் லெஸ்பாஸ் தீவு அருகே கடலில் மூழ்கியது.

தகவல் அறிந்ததும் துருக்கி கடற்பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் படகில் இருந்தவர்கள் கடலில் மூழ்கினர். அவர்கள் 37 பேரின் உடல்களை கடற்படை வீரர்கள் மீட்டனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.

பலியானவர்கள் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மரை சேர்ந்தவர்கள், இதற்கிடையே மூழ்கி கொண்டிருந்த படகில் தத்தளித்துக் கொண்டிருந்த 75 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிரீஸ் நாட்டின் சமோஸ் தீவில் மூழ்கிய படகில் பயணம் செய்த 25 அகதிகள் உயிரிழந்தனர். அவர்களில் 10 பேர் குழந்தைகள்.

கடந்த செப்டம்பரில் துருக்கியில் கனாக்கலே மாகாணத்தில் அய்வாசிக் நகரம் அருகே அகதிகள் படகு மூழ்கியதில் அய்லான்குர்தி என்ற சிறுவன் பலியானான். கரையோரம் ஒதுங்கி கிடந்த அவனது பிணத்தின் போட்டோ வெளியாகி உலக அளவில் பெரும் சோக அலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY