உலக நாடுகளை மிரட்டும் “ஜிகா வைரஸ்”! அறிகுறிகளும், தடுப்புமுறைகளும்!

0
507

உலக நாடுகளே தற்போது பயந்து நடுங்கி கொண்டிருக்கிறது என்றால் அது “ஜிகா வைரசை” எண்ணித்தான். ஆப்பிரிக்காவின் உகண்டாவில் உருவாகி, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகள் என உலகம் முழுதும் பரவி வருகின்றது.

டெங்கு, சிக்கன்குன்யாவை பரப்பும் ’ஏடிஸ்’(Aedes) என்ற கொசுக்களால்தான் இந்த ஜிகா வைரஸ் நோயும் பரப்பப்படுகிறது.

ஜிகா காடுகளில் வாழும் குரங்குகளிடமிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியது 1947 ம் ஆண்டிலே கண்டுபிடிக்கப்பட்டது. அதுவே பெயர் காரணமானது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடித்தால் யாருக்கும் வரலாம்.

2014ம் ஆண்டு மார்ச் 3ம் திகதி ஜிகா வைரஸ் ஈஸ்டர் தீவு பழங்குடியினரிடமிருந்து பரவியதை சிலி நாடு கண்டறிந்தது.

2015ம் ஆண்டு மே மாதத்தில் வடகிழக்கு பகுதியிலிருந்து பரவுவதை பிரேசில் கண்டறிந்தது.

இந்த நோய் தாக்குவதால் உடனடியாக மரணம் நேர்வதில்லை என்றாலும், கவனிக்காமல் விடப்பட்டால் அதிகமாகி பெரிய பாதிப்புகள் ஏற்படலாம்.

ஜிகா வைரஸ் நோய் வலிமையோடு பரவுவதாக உலக சுகாதார நிறுவன தலைவர் மார்கரெட் சான் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

அறிகுறிகள்

கொசு கடித்து 2-7 நாட்களில் நோய்க்கான அறிகுறிகள் தென்படும்.
காய்ச்சல்
தோல்களில் சொறிபோன்ற படர்வு
கை, கால்களின் மூட்டுகளில் வலி
தசை வலி
வறட்சி
உடலில் சோர்வும் ஏற்படுதல்

குழந்தைகள் மீதான தாக்கம்

இந்த நோய் குழந்தைகளிடம் பெருமளவில் பரவிவருகிறது. பிரேசிலில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்ப்பிணிகளுக்கு நோய் இருந்தால் குழந்தைகளுக்கு பரவுகிறது. இந்த நோயின் பாதிப்போடு பிறக்கும் குழந்தைகள் தலைசிறுத்து வினோதமாக பிறக்கின்றனர், மூளை பாதிக்கப்பட்டு அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுகிறது.

இது எதிர்கால சந்ததியை பாதித்துவிடும் என்பதால் பாதிக்கப்பட்ட நாடுகள் பெண்களை கருத்தரிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றன.

பரவல் தடுப்பு நடவடிக்கை

ரத்த பரிமாற்றம் மற்றும் உடலுறவினாலும் இந்த நோய் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எல்லா சமயத்திலும் உறுதியல்ல.

மனிதர்களை அதிகமாய் கொல்லும் உயிரினங்களில் ’டாப் டென்’ ல் முதல் இடத்தில் இருப்பது கொசுதான்.

அதனால், இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட ஒருவனும் கொசுக்களும் இருந்தால் போதும் அந்த பகுதி முழுதுமே நோய் பரவுவது உறுதி.

கனடா, சிலி நாடுகளை தவிர, எல்லா நாடுகளிலுமே ’ஏடிஸ்’ கொசுக்கள் இருக்கிறது.

ஆனால், எங்கு சென்றாலும் கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்வது மட்டுமே தடுப்பு நடவடிக்கையாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY