கஞ்சா மற்றும் போதையூட்டப்பட்ட லேகியத்துடன் இருவர் கைது!

0
193

அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவில் கேரணளக் கஞ்சா மற்றும் போதையூட்டப்பட்ட லேகியத்துடன் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அம்பாறை போதை வஸ்து ஒழிப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்களிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றதின் பேரில் சனிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையில் இந்தக் கைதும் போதைப் பொருள் கைப்பற்றலும் இடம் பெற்றுள்ளது.

கல்முனை புதிய வீதி ஒழுங்கையொன்றில் மறைந்திருந்த 24 வயதான நபரிடமிருந்து 1 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் அந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய குறுக்கு வீதியில் வைத்து 29 வயதான நபரொருவரிடமிருந்து 5 கிராம் போதையூட்டப்பட்ட லேகியம் கைப்பற்றப்பட்டதோடு அந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

அப்துல்லாஹ்

LEAVE A REPLY