ஓட்டமாவடியில் முதலுதவி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

0
270

மட்/ம/ம/ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் சென் ஜோன் அம்பியுலேன்ஸ் முதலுதவி பயற்சி பெற்ற மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு அன்மையில் கல்லூரி வளாகத்தில் சென் ஜோன் அம்பியுலேன்ஸின் உதவி மாவட்ட ஆணையாளரும் தேசிய பயிற்றுவிப்பாளருமான எஸ்.எல்.எச்.எம்.இனாமுல்லாஹ் ஆசிரியரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்து கொண்ட கல்லூரி அதிபர் ஜனாப் எம்.எல்.எம்.ஜூனைட் மாணவர்களுக்கு சின்னம் சூட்டுவதனையும் பிரதி அதிபர்களான எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக், ஏ.எல்.கபீர், உதவி அதிபரான எம்.ஏ.நஜீப், உடற்கல்வி ஆசிரியர்களான ஏ.சீ.எம்.பிர்னாஸ், ஏ.எல்.எம்.சுகைல், பகுதி தலைவர்களான எம்.எம்.இப்றாகிம், எம்.எம்.ஏ.அப்துல் காதிர், கபூர் மெளலவி ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனை படங்களில் காணலாம். இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் குருணாகல் பொல்கஹாவெல பறாகிரமபாகு மகா வித்தியாலையத்தில் நடைபெற்ற ஐந்து நாட்கள் இடம்பெற்ற தேசிய பயிற்சி பாசறையில் கலந்து கொண்டமையானது இங்கு குறிப்பிடதக்க விடயமாகும்.

அஹமட் இர்ஸாட்

00d98c5e-b115-4306-9208-032dad983222 35d20d9a-f94a-48b6-9949-8b9769b6729e 3101a123-59b1-4999-808e-bfa6674d07ee 8307965f-1925-4025-b94d-0a9b32339ee4 e777b913-cc6f-45d8-a7e2-e8ab8bee83e8

LEAVE A REPLY