எனக்கு சவாலாக விளங்கிய ஒரே வீரர் யார் தெரியுமா? மனம் திறந்த முரளிதரன்

0
630

சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்­களை கொண்டு விளை­யா­டு­வ­தற்­காக அவுஸ்­தி­ரே­லி­யாவின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ், மாஸ்டர்ஸ் சம்­பியன்ஸ் லீக் என்ற தொடரை அறி­மு­கப்­ப­டுத்­தினார். இதில் 6 அணிகள் இடம்­பி­டித்­துள்­ளன. 6 அணி­க­ளிலும் சேவாக், லாரா, முத்­தையா முர­ளி­தரன், கில்­கிறிஸ்ட், ஸ்மித், ஜொன்டி ரோட்ஸ் போன்ற ஜாம்­ப­வான்கள் இடம்­பெற்­றுள்­ளனர்.

மாஸ்டர்ஸ் சம்­பியன்ஸ் லீக் இரு­ப­துக்கு 20 தொடர் கிரிக்கெட் திரு­விழா ஐக்­கிய அரபு எமிரேட்ஸில் தொடங்­கி­யது. இதில் 6 அணி வீரர் களும் கலந்து கொண்­டனர்.

ஜெமினி அரே­பியன்ஸ் அணியில் முத்­தையா முர­ளி­தரன் இடம்­பெற்­றுள்ளார். லியோ லயன்ஸ் அணியில் பிரையன் லாரா இடம்­பெற்­றுள்ளார்.

இந்நிலையில் பழைய சர்­வ­தேச போட்டி குறித்து முத்­தையா முர­ளி­தரன் நினைவு கூர்ந்தார்.

அப்­போது அவர் கூறும் போது ‘‘எனது கிரிக்கெட் வாழ்க்­கையில் ஏரா­ள­மான துடுப்­பாட்ட ஜாம்­ப­வான்­க­ளுக்கு பந்து வீசி­யுள்ளேன். ஆனால், லாரா­விற்­குதான் பந்து வீசு­வது மிகவும் கடி ­ன­மாக இருந்­தது. அவ­ருக்கு

எதி­ராக அதிக அளவு டெஸ்ட் போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ளேன். சுழற்­பந்தை துவம்சம் செய்­வதில் லாரா மிகச்­சி­றந்­தவர் என்றார்.

LEAVE A REPLY