யோஷித்த ராஜபக்ஸ கைது!

0
127

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது மகனான யோஷித்த ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கடுவலை நீதவான் முன்னிலையில் தற்போது ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்தத் தகவலை கடற்படை ப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி உறுதிப்படுத்தினார்.

யோஷித்த ராஜபக்ஸவிடம் இன்று முற்பகல் முதல் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

யோஷித்தவுடன் CSN அலைவரிசையின் பிரதம அதிகாரி ரொஹான் வெலிவிட்ட, நிஷாந்த ரணதுங்க, JTF பெர்னாண்டோ, கவிஷால் திசாநாயக்க ஆகியோரும் கடுவலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY