ரஷியாவில் பயங்கர நிலநடுக்கம்!

0
129

பசிபிக் பெருங்கடல் அருகே நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியையொட்டி அமைந்துள்ள கிழக்கு ரஷியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று அதிகாலை 3.25 மணியளவில் எலிஸோவோ நலரில் இருந்து சுமார் நூறு கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் சுமார் 160 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் ஏழாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் ஏதுமில்லை என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY