(Poem) இணைந்தே இருப்பவை

0
76

இணைந்தே இருப்பவை
+++++++++++++++++++

கைது செய்யப் படுவதும்
ஹார்ட் அட்டக் வருவதும்

இலக்ஸனில் தோற்பதும்
இன வாதம் பேசுவதும்

அமைச்சர் ஆகுவதும்
அப்பிள் தோட்டம் வாங்குவதும்

AL முடிப்பதும்
இங்லிஸ் கிளாஸ் போவதும்

சீஸனுக்குப் போவதும்
சீற் கிடைக்காதிருப்பதும்

எக்ஸாம் வருவதும்
இரவில் தொழுவதும்

கவிதை வடிப்பதும்
கடுப்பைத் தருவதும்

பிள்ளை பாடுவதும்
பிறரிடம் காட்டுவதும்

கல்யாணம் முடிப்பதும்
கண்டி நுவரெலியா போவதும்

பயானைக் கேட்பதும்
பக்கத்து ஆசாமிக்கென நினைப்பதும்

ஷெல்பி எடுப்பதும்
செயார் பண்ணிக் கடிப்பதும்

கஷ்டமான பாஸ்வேர்ட் போடுவதும்
கன்றாவி தனக்கே மறப்பதும்

ஒற்றைக் கோட்டில் முந்துவதும்
ஒழித்து நிற்பவனிடம் மாட்டுவதும்

கார் ஒன்று வாங்குவதும்
கராஜிலே அலைவதும்

வெளி நாடு போவதும்
வெகேஷனுக்காய் தவிப்பதும்

இன்னும் பல உண்டு
இணைந்தே இருப்பவை.

Mohamed Nizous

LEAVE A REPLY