(Photos) உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு அருகில் இளைஞனுக்கு கத்திக் குத்தும் கோடரி வெட்டும்

0
107

DSC00961மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு சமீபமாக நேற்று (29) வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக் குத்து மற்றும் கோடரிக் கொத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் தாமரைக்கேணி கிராமத்தைச் சேர்ந்த மன்சூர் முஜாஹித் (வயது 26) என்ற இளைஞனே மேற்படி கத்திக் குத்துக்கும் கோடரி கொத்துக்கும் இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

மேற்படி குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி, கோடரி என்பன அந்த இடத்திலேயே விட்டுச் செல்லப்பட்டுள்ளன.

இந்த இளைஞன் CD விற்பனை நிலையமொன்றுக்கு CD வாங்க வந்தபோது தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பிலிருந்து ஸ்தலத்திற்கு விரைந்த ‘குற்ற இடத்தில் பொலிஸ் அதிகாரிகள்’ ‘Scene of Crime Officer’ தடயங்களைப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(அப்துல்லாஹ்)

DSC00967 DSC00968 DSC00969 DSC00970 DSC00976 DSC00977 DSC00978 DSC00980 DSC00981

LEAVE A REPLY