(Poem) கேட்டேன்

0
146

கேட்டேன்
++++++++++

கத்தம் ஓதா
ஹஸ்ரத் கேட்டேன்
கப்ஸா இல்லா
ஹதீஸ் மஜ்லிஸ் கேட்டேன்
சத்தம் போடா
முஅத்தின் கேட்டேன்
சண்டை பிடிக்கா
ட்ரஸ்டி போட் கேட்டேன்

தாயத்தில் எழுதா
ஆயத்தைக் கேட்டேன்
மாயத்தில் விழாத
மார்க்கத்தைக் கேட்டேன்
ஷிர்க்கைத் தராத
ஷியாரம் கேட்டேன்
முர்தத் வழிகள்
முடியக் கேட்டேன்

குறட்டை இல்லா
குத்பாக் கேட்டேன்
மிரட்டல் இல்லா
தெளஹீத் கேட்டேன்
வட்டி கலக்கா
வர்த்தகம் கேட்டேன்
முட்டி மோதா
தாயிகள் கேட்டேன்

பேக் ஐடி இல்லா
பேஷ்புக் கேட்டேன்
பேஜ் லைக் கேட்கா
பிரண்ட்ஷிப் கேட்டேன்
இடையில் நிற்கா
ஸ்மார்ட் போண் கேட்டேன்
தடையின்றித் தருகின்ற
டேட்டா கேட்டேன்

பொய்யே பேசாத
பொலிடிஷியன் கேட்டேன்
கையை நீட்டாத
காண்ஸ்டபிள் கேட்டேன்
பஞ்சம் ஓதா
பட்ஜட் கேட்டேன்
லஞ்சம் வாங்கா
ட்ரபிக் பொலிஸ் கேட்டேன்

இன்னும் இருக்கு
எழுதுவதற்கு
இடையில் இப்போ
நிறுத்துகிறேன்

-Mohamed Nizous-

LEAVE A REPLY