வியக்கவைக்கும் வசதிகளுடன் அறிமுகமாகும் அப்பிள் IPad Air 3

0
270

தனது ஒவ்வொரு அறிமுகம் மூலமும் மக்களை திரும்பி பார்க்கவைக்கும் அப்பிள் நிறுவனம் தனது புதிய iPadல் பல்வேறு வசதிகளை புகுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை போன்று ஐபேடும் வாடிக்கையாளர்களை நன்கு கவர்ந்துள்ளது.

இதன் காரணமாகவே iPad 1, 2,3,4 மற்றும் iPad Air,2 என ஏராளமான வகைகளை அப்பிள் நிறுவனம் அறிமுகம்படுத்தியது.

கடைசியாக கடந்த நவம்பர் மாதம் தனது iPad Pro மொடலை அறிமுகப்படுத்தியது அப்பிள் நிறுவனம்.

ஆனால் அதன் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் தற்போது அடுத்த மாடலான iPad Air 3யின் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அப்பிள் நிறுவனத்தின் செய்தியாளர்கள் நிகழ்வின் போது இதை அறிமுகப்படுத்தவுள்ளது என்றும் கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்களை கவர இந்த புதிய ஐபேடில் நிவீன வசதிகள் புகுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மிகவும் துல்லியான வீடியோக்களை பார்க்க உதவும் 4K வசதியுடன் இந்த மொடல் வெளிவரவுள்ளதாக யூகங்கள் நிலவுகின்றன.

இதனுடன் 4GB Ram, LED Flash வசதியுடன் கூடிய பின்புற கமெரா ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் iPad Air 3 உடன் Iphone 5Se, Apple watch ஆகியவையும் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY