அரசியல்வவாதிகள் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலே யே அரசியலுக்கு வருகின்றனர் வாக்காளர்கள்தான் பிழை விடுகின்றார்கள் :அமீர் அலி

0
211

அரசியல்வவாதிகள் எல்லோரும் நல்லவர்கள் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலே யே அரசியலுக்கு வருகின்றனர் ஆனால் வாக்காளர்கள்தான் பிழை விடுகின்றார்கள் என்று கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் எழுதிய “இலங்கை முஸ்லீம்களால் எதிர் கொள்ளப்படும் சவால்கள்” எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று (28.01.2016) ஓட்டமாவடி பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்த உரையாற்றுகையில்.
அனைத்து அரசியல்வாதிகளும் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அரசியலுக்கு வருகின்றார்கள் ஆனால் வாக்காளர்கள் அரசியல்வாதிகளை மிஞ்சியவர்களாக அவர்களை ஏமாற்றுகின்ற வேலைகளை வாக்காளர்கள் செய்கின்றார்கள்.

தங்களது தேவைகள் முடிவடையவேண்டும் என்பதற்காக அரசியல்வாதியை ஆதரிப்பதாக கூறுவதும் அந்த விடயம் முடிவடைந்ததும் அவரை விமர்சிப்பவர்களாகவும் வாக்காளர்கள் உள்ளனர். இவ்வாறான செயற்பாட்டின் காரணமாக தனது கருத்தினை அரசியல்வாதி வெளியிட்டால் அவர் தவறானவராக சித்தரிக்கப்படுகின்றார்.

தற்போது நாட்டில் நல்லாட்சி நிலவுகின்றது என்று கூறும் கருத்திற்கு நான் உடன்பாடு கிடையாது. நல்லாட்சி என்று சொல்வது நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் நல்லது நடக்க வேண்டும், இன்று நாட்டில் பெரும்பான்மைச் சமுகத்தைச் சேர்ந்த இரண்டு பிரதான கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் கடந்த காலத்திலே சிறுபான்மை அரசியல்தலைவர்களால் சிக்குண்ட பிரச்சினைகள் என்னவென்று தெரியும். அந்தப் பிரச்சினைகளில் இருந்து பெரும்பான்மை கட்சிகள் தப்பித்துக் கொள்வதற்கான இனக்கப்பாட்டுடன்தான் 20வது அரசியல் சட்டம் உருவாகவுள்ளது.

20வது அரசியல் சட்டம் அமுலுக்கு வரும் பட்சத்தில் தொகுதிவாரி தேர்தல் முறை வரும். அதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு பிரச்சினை இல்லை. வட கிழக்கு வெளியே உள்ள சிறுபான்மை சமுகத்தைச் சேர்ந்த மக்கள் பாதிப்டைவார்கள் எனறும் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் நூல் அறிமுகத்தினை அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.நியாஸ் நடாத்தியதுடன், கருத்துரையினை கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி மற்றும் எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா ஆகியோர் வழங்கியதுடன், நன்றியுரையை நூலாசிரியர் எம்.எம்.நௌபல் வழங்கினார்.நூலின் முதல் பிரதியை தொழிலதிபர் ஏ.எல்.எம். ஹனீபா பிரதம அதிதியிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

வாழைச்சேனை நிருபர்

LEAVE A REPLY