டின் மீன்களுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு

0
122

தகரத்தில் அடைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ டின் மீனுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

முன்னதாக 50 ரூபாவாக இருந்த இந்த வரியை தற்போது 100 ரூபா வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY