காவியுடைக்கான கௌரவம் இன்று இல்லாமல் போயுள்ளது

0
132

எமது நாட்டின் பௌத்த பிக்­குகள் மிகவும் மோச­மாக நடந்து கொள்­கி­றார்கள். இதனை முழு உல­கமும் பார்த்துக் கொண்­டி­ருக்­கி­றது. இன்று காவி­யு­டைக்கு கௌரவம் இல்­லாமற் போய்­விட்­டது.

ஞான­சார தேரரும், அவரைச் சேர்ந்­த­வர்­களும் நாட்டின் சட்­டத்தை மதிக்க வேண்டும் என ஜாதிக பல சேனாவின் தலைவர் வட்­ட­ரக்க விஜித தேரர் தெரி­வித்தார்.

ஞான­சார தேரர் என்னை எதி­ரி­யாகக் கரு­தி­னாலும் அவரின் கைதினால் அதிகம் கவ­லைப்­ப­டு­பவன் நானே. ஞான­சார தேர­ருக்கு மாத்­தி­ர­மல்ல நாட்டின் எந்­தவோர் பிர­ஜைக்கும் துன்பம் ஏற்­ப­டக்­கூ­டாது என்றும் அவர் கூறினார்.பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், “ஞான­சார தேரர் நீதி­மன்­றுக்குள் நடந்து கொண்­டுள்ள முறை முற்­றிலும் தவ­றா­ன­தாகும். நீதித்­து­றை­யையும், நீதி­ப­தி­க­ளையும் அவ­ம­தித்துப் பேசி­யி­ருக்­கிறார்.

நீதி­ப­தியின் கட­மை­க­ளுக்கு இடை­யூறு விளை­வித்­தி­ருக்­கிறார். பிரகீத் எக்­னெ­லி­கொ­டவின் மனைவி சந்­தி­யா­வுக்கு அவ­ரது கண­வ­ருக்கும் என்ன நடந்­தது என்­பது பற்றி அறிந்து கொள்­வ­தற்கு உரிமை இருக்­கி­றது.

அவரும் இந்­நாட்டுப் பிர­சையே அவரும் அவ­ரது பிள்­ளை­களும் பிரகீத் எக்­னெ­லி­கொ­டவின் மறை­வினால் துன்­பத்தில் ஆழ்ந்­தி­ருக்­கி­றார்கள். அவர் உயி­ருடன் இருக்­கி­றாரா? அல்­லது கொலை செய்­யப்­பட்டு விட்­டாரா? என்­பதை சட்­டமே வெளிப்­ப­டுத்த வேண்டும்.

பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேர­ரினால் கடந்த காலங்­களில் நானே மிகவும் பாதிக்­கப்­பட்­டவன். பொது­ப­ல­சேனா அமைப்­பினர் என்­னைத்­தாக்கி வெட்டுக் காயங்­க­ளுக்­குள்­ளாக்­கி­னார்கள்.

பொலிஸார் என்­மீது முறைப்­பாடு செய்து நான் 14 நாட்கள் களுத்­துறை சிறையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டேன்.

ஞான­சார தேரர் பல தட­வைகள் என்னை அச்­சு­றுத்­தினார். என்­றாலும் அவ­ரது கைதினால் நான் மிகவும் கவ­லை­ய­டைந்­துள்ளேன்.

நாம் பௌத்த தேரர்­க­ளாக இருக்­கலாம். சாதா­ரண பிர­சை­யாக இருக்­கலாம். ஆனால் சட்டம் அனை­வ­ருக்கும் சம­மா­னதே. அதை மதிக்க வேண்டும்.

நாட்டின் சட்­டங்­களை மதிக்­கும்­படி பௌத்த பெருமான் புத்­தரும் கூறி­யுள்ளார். கோட்டை நீதி­மன்றில் விசா­ர­ணையின் கீழ் இருக்கும் எனது வழக்கில் பிர­தி­வா­தி­யான ஞான­சா­ர­தேரர் என் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி மைத்­திரி குண­ரத்­னவை ‘நாய்’ என்­றெல்லாம் அவ­தூ­றாக ஏசி­யுள்ளார்.

பௌத்த குரு­மார்கள் ஒழுக்­க­முள்­ள­வர்­க­ளாக சமு­தா­யத்தில் வாழ்­வ­தற்கு மகா­நா­யக்க தேரர்கள் விழிப்­பூட்ட வேண்டும்.

பிக்­கு­களின் இவ்­வா­றான செயற்­பா­டுகள் குறித்து நாட்டு மக்­களே விசனம் தெரி­விக்­கி­றார்கள். சந்­தியா எக்­னெ­லி­கொட கண­வனை இழந்து எவ்­வ­ளவு வேத­னைக்­குள்­ளா­கி­யுள்ளார் என்­பதை நாம் நினைத்­துப்­பார்க்க வேண்டும்.

நாட்டில் காணாமற் போனவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்ட, தேடிப்பார்க்க சட்டத்தில் இடமிருக்கிறது. நீதித்துறையின் நடவடிக்கைக்கு எவராலும் இடையூறு விளைவிக்க முடியாது.

ஞானசார தேரர் நீதியை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

-Vidivelli-

LEAVE A REPLY