தீராத சோகம்: கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து 8 குழந்தைகள் உட்பட 12 பேர் பலி

0
71

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.

மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.

இந்நிலையில், கிரீஸ் நாட்டில் நுழைவதற்காக மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகுகளில் இன்று பயணம் செய்தவர்களின் படகு சமோஸ் தீவு அருகே வந்தபோது திடீரென நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் 12 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களில் 8 பேர் குழந்தைகள். கடலில் தத்தளித்த 10 பேர் கிரீஸ் நாட்டு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மாயமான 20 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY