ஞானசார தேரரின் பிணை மனு நிராகரிப்பு

0
202

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நிராகரிக்டகப்பட்டுள்ளது.

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஞானசார தேரர் சார்பில் பிணை வழங்குமாறு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க பிணை வழங்க மறுத்துள்ளார்.

கடந்த 26ம் திகதி ஞானசாரதேரர் கைதுசெய்யப்பட்டதோடு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

(அத தெரண)

LEAVE A REPLY