ஞானசாரவுக்கு பிணை கோரி மனு; 3 சந்தேகநபர்கள் கைது!

0
355

பொதுபல சேனாவின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோரும் பிணை மனு இன்று (28) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அவர் ஹோமாகம நீதிமன்றத்தில் நுழைந்து நீதிமன்றை அவமதிக்கும் வித்தில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதி உட்பட மூவர் இன்று (28) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அன்றையதினம் (25) நீதிமன்றின் முன்னால் அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபட்டோரை கைது செய்து அடுத்த வழக்கு தினத்தில் மன்றில் சமர்ப்பிக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் நேற்று (27) உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(TK)

LEAVE A REPLY