இணையதளம் வழியாக ஒளியின் வேகத்தில் தகவல் பரிமாற்றம் சாத்தியம்: புதிய ஆய்வு முடிவில் தகவல்

0
242

செல்போன்களில் ஆண்ட்ராய்டு செயல்படுவது போல, ஆப்டிகல் தொழில்நுட்ப உதவியுடன் இணை யதளம் மூலம் ஒளியின் வேகத்தில் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும் என முதன்முறையாக ஓர் ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

இப்போது நிலவும் இணையதள உள்கட்டமைப்பு பற்றாக்குறை பிரச்சினைக்கு இந்த ஆய்வு தீர்வாக அமையும் என்று கூறப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பல்வேறு வகையான பயன்பாடு காரணமாக அதிகரித்து வரும் அலைவரிசைக்கான தேவைக்கும் இது தீர்வாகவும் இருக்கும்.

இதுகுறித்து பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் மின்னியல், மின்னணுவியல் துறை பேராசிரியர் ரெசா நெஜபதி கூறும்போது, “இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் தொழில்நுட்பங்கள், ஆப்டிகல் இணைய உள்கட்ட மைப்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தும். ஆப்டிகல் வலைய மைவில் உள்ள கடும் சிக்கல் தவிர்க்கப்பட்டு, புரோகிராமர்கள், செயலி உருவாக்குபவர்களுக்கு ஒளியின் வேகத்தில் செயல்படும் இணைய செயலிகளை உருவாக்க வாய்ப்பாக அமையும்.

அதாவது கூகுள் ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் ஆகிய செயலிகளின் அடிப்படைச் செயல்பாட்டைப் போல புதிய தொழில்நுட்பம் செயல்படும்” என்றார்.

LEAVE A REPLY