இரணைமடு குளத்தின் கொள்ளளவு உயரத்தினை 2 மீ. ஆல் அதிகரிக்க ஆலோசனை

0
160

இரணைமடுக்குளத்தின் கொள்ளளவு உயத்தினை 2 மீற்றரால் அதிகரிக்கத் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் இவ்வாண்டுக்கான அபிவிருத்தி திட்டங்கள் குறித்த ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு , ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், சுன்னாகம் நிலத்தடி நீர்ப்பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ள பாவனையாளர்களுக்கான நிரந்தர தீர்வாகவே இரணைமடுக்குளம் தொடர்பான ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்காக 17 -18 மில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வேலை ஆரம்பிக்க நீர்ப்பாசன திணைக்களத்துடன் இணைந்து செயற்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்.

எனவே இது தொடர்பில் விவசாயிகள் எவரும் பயம் கொள்ளத் தேவையில்லை. இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த அனைவரதும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானதொன்றாகும். கடந்த மழை காலங்களில் வாவி நிறைந்து அதன் பின்னர் நீர் சேகரிக்க முடியாத போது வாவி திறந்து விடப்பட்டு மழை நீரனைத்தும் கடலுடன் கலந்தமை நாம் அறிந்ததே.

இது வருடா வருடம் நடந்து வருகின்றதொரு செயலாகும். ஆகவேதான் இச் செயற்திட்டம் மிகச் சிறந்த வழியாக இருக்குமென நாம் நம்புகிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY