காத்தான்குடி பிரதேச விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பில் பிரதியமைச்சருடன் யூ.எல்.எம்.என். முபீன் சந்திப்பு

0
309

காத்தான்குடி பிரதேச விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பில் விசேட சந்திப்பு 25.01.2016 ஆம் திகதியன்று விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸுக்கும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான முபீனுக்கும் இடையில் அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்றது.

மேற்படி சந்திப்பில் காத்தான்குடி பிரதேச விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பில் விசேடமாக ஆராயப்பட்டது. காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பொது மைதான அபிவிருத்தி, காத்தான்குடி – ஆரயம்பதி எல்லையில் அமைந்துள்ள விக்டரி மைதானத்தை விசேடமாக அபிவிருத்தி செய்தல் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் காத்தான்குடி பிரதேச விளையாட்டுக் கழகங்களை ஊக்கப்படுத்தல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஹரீஸ், தான் விரைவில் காத்தான்குடிக்கு விஜயம் செய்து மேற்படி மைதானங்களை பார்வையிடுவதுடன் விளையாட்டுக் கழகங்களையும் நேரில் சந்தித்து காத்தான்குடி விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதாக இணைப்புச் செயலாளர் முபீனிடம் உறுதியளித்தார்.

(ஏ.எல். டீன் பைரூஸ்)

LEAVE A REPLY