ஒலுவிலில் சிறிய லொறி வயலுக்குள் குடை சாய்ந்தது

0
224

ஒலுவில் பிரதான வீதியில் கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த பட்டா ரக லொறி ஒன்று குடைசாய்ந்து சற்று முன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதியில் மாடு ஒன்று குறுக்கறுத்ததில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வயல் வெளிக்குள் தடம்புரண்டு சென்றதாக அவ்வாகனத்தின் சாரதி தெரிவித்தார்.

வாகனத்தில் பயணித்த சாரதி அவரது உதவியாள் இருவருக்கும் எதுவித பாதிப்பும் இன்றி தெய்வாதீனமாக உயிர் தப்பினர். வாகனத்துக்கும் பாரிய சேதம் எதுவும் இல்லை.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கலீல் எஸ். முஹம்மத்)

20160128_083950 20160128_084004 20160128_084141

LEAVE A REPLY