காத்தான்குடியில் இஸ்லாமிய மாநாடு

0
579

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘இஸ்லாமிய மாநாடு’ இன்ஷா அழ்ழாஹ் நாளை (29) வெள்ளிக்கிழமை காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் (குட்வின் சந்தி) நடைபெறவுள்ளது.

பிரபல உலவியல் ஆலோசகர் மௌலவி எஸ்.எம். அப்துல் ஹமீட் (ஷரஈ) மற்றும் மௌலவி எம்.ரீ.எம். அஸ்ஹர் (மின்ஹாஜி) ஆகியோர், ‘யார் இந்த ஷீயாக்கள்?’ மற்றும் ‘இஸ்லாத்தில் நுழைந்த அத்வைதம்’ எனும் தலைப்புக்களில் உரையாற்றவுள்ளனர்.

மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள மாநாட்டின் சொற்பொழிவுகள் www.zajilnews.lk, www.dharulathar.com ஆகிய இணையதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

இம் மாநாட்டின் இறுதியில் முக்கிய பல தீர்மானங்கள் வாசிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY