களனி டயர் தொழிற்சாலையில் பாரிய தீவிபத்து!

0
279

களனி பிரதேசத்தில் அமைந்துள்ள டயர் தொழிற்சாலையொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

களனி, வராகொடை பிரதேசத்தில அமைந்துள்ள குறித்த தனியார் தொழிற்சாலை இலங்கையின் மிகப் பெரிய டயர் தொழிற்சாலைகளில் ஒன்றாகும்.

இந்நிலையில் இன்று நண்பகல் குறித்த தொழிற்சாலையில் பாரிய தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

பேலியாகொடை நகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் கடும் போராட்டத்தின் மத்தியில் தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வண்டிகளும் தற்போது ஸ்தலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தில் பெருமளவில் பொதுமக்களும் கூடியுள்ள நிலையில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிசார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பெரும் சிக்கல்களை எதிர் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY