உலக அளவில் 10.15 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கும் TOYOTA

0
236

உலக அளவில் அதிக வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெயரை தொடர்ந்து 4-வது முறையாக பிடித்துள்ளது ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம்.

2015-ம் ஆண்டில் மொத்தமாக 10.15 மில்லியன் கார்களை விற்பனை செய்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 4-வது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் டொயோட்டா நிறுவனத்தின் பங்கு பதிப்பு 3.80 சதவீதம் உயர்ந்தது.

டொயோட்டாவுக்கு அடுத்தப்படியாக மாசுக் கட்டுப்பாட்டில் மோசடி செய்ததாக சர்ச்சையில் சிக்கிய வோல்ஸ்வேகன் நிறுவனம் இடம் பெற்றுள்ளது. வோல்ஸ்வேகன் நிறுவனம் உலகம் முழுவதும் 9.93 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

மூன்றாவது இடத்தில் அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளது. இந்த நிறுவனம் 2015-ம் ஆண்டில் 9.8 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து உள்ளது.

LEAVE A REPLY