(Poem) கைது!

0
147

Arrested44காவியத்தில்
காவியை கண்டதுண்டு
காவியைக்
காவலர்
காவியதைக் கண்டதுண்டா

சார
எலி பிடித்துக் கண்டதுண்டு
கிலி பிடித்துக் கண்டதுண்டா?

சிறை சென்றால்
சிலருக்கு ஞானம் வரும்.
ஞானமே சிறை சென்றால்…
என்ன வரும்?

தன் வாயால்
தானே மாட்டுவது
தவளை மட்டுமல்ல
‘தேர’ யும் தான்.

படமெடுக்கும்
நாக பாம்பு
பாய்ந்து கொத்தும்
படம் காட்டும்
நாக பாம்பு
பயந்து சரணடையும்.

(Mohamed Nizous)

LEAVE A REPLY