ரூ.4500 கோடி சவுதியின் நன்கொடை: ஊழல் புகாரில் இருந்து மலேசிய பிரதமர் விடுவிப்பு

0
92

மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.4,500 கோடி ஊழல் பணமல்ல. அது சவுதி அரச குடும்பத்தின் தனிப்பட்ட நன்கொடை என மலேசிய அரசின் தலைமை வழக்கறிஞர் தெளிவுபடுத் தியுள்ளார். இதன் மூலம், ஊழல் குற்றச்சாட்டிலிருந்து மலேசிய பிரதமர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மலேசிய பிரதமர் நஜீப் ரசாக், 1மலேசிய மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) என்ற அரசு முதலீட்டு நிதியத்திலிருந்து சுமார் ரூ. 4,500 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்தப் பணம் அவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக அவரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, விசா ரணை நடைபெற்றது. சோதனை யின் போது கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், மலேசிய அரசின் தலைமை வழக்கறி ஞரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், பிரதமர் எவ்வித தவறும் செய்யவில்லை என தலைமை வழக்கறிஞர் முகமது அபாண்டி அலி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அபாண்டி கூறும்போது, “மலேசிய ஊழல் தடுப்பு அமைப்பின் விசாரணையின் படி, கடந்த 2013 மார்ச்-ஏப்ரல் காலகட்டத்தில், நஜீபின் வங்கிக் கணக்குகளுக்கு 68.1 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.4,500 கோடி) மாற்றப்பட்டதில் குற்றச் செயல் எதுவுமில்லை. அந்தப்பணம், சவுதி அரச குடும்பத்தினரால் தனிப்பட்ட முறையில் நஜீபுக்கு வழங்கப் பட்ட நன்கொடை” எனத் தெரிவித் துள்ளார்.

மேலும், “சம்பந்தப்பட்ட நன்கொடையாளர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப் பட்டுள்ளது. அந்த நன்கொடைக் கான காரணம் எதுவும் தெரிவிக் கப்படவில்லை. அது, நஜீபுக்கும், சவுதி அரச குடும்பத்துக்கும் இடை யிலான விவகாரம். நஜீபுக்கு பதிலுதவியாகவோ, லஞ்ச மாகவோ அந்தத் தொகை கொடுக் கப்பட்டதற்கு ஆதாரம் ஏதுமில்லை. இந்தத் தொகை பரிவர்த்தனையில் குற்றச் செயல்கள் ஏதும் இல்லை என்பதில் நான் முழுத் திருப்தி அடைகிறேன்” எனத் தெரிவித்துள் ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நஜீப் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. சவுதி அரசு அதிகாரிகளும் கருத்து தெரிவிக்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் டோனி புவா, அரசு வழக்கறிஞரைச் சாடி யுள்ளார். “தனிப்பட்ட முறையிலான நன்கொடை என்பதை முறைகேடு அல்ல என மறுப்பதற்கு இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

-TH-

LEAVE A REPLY