சீன மீன்பிடி படகு தென் கொரிய எல்லையில் கவிழ்ந்தது: 5 பேர் மாயம்

0
159

சீனாவைச் சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று தென் கொரியாவின் தெற்கு கடற்கரைப்பகுதியில் இன்று கவிழ்ந்தது.

தென் கொரியாவின் காஜியோ தீவிற்கருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த கொரிய கடற்படையினர் 5 பேரை மீட்டுள்ளனர். இதில் ஒருவர் குளிர்ந்த கடல் நீரில் மூழ்கியதால் சுய நினைவை இழந்துள்ளார்.

மேலும், படகில் இருந்த 5 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லையென கொரிய கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY