உலகின் பெரும் செலவந்தராக மீண்டும் முதலிடத்தில் பில் கேட்ஸ்!

0
223

போர்ப்ஸ் பத்திரிகையை போலவே உலகின் செல்வந்தர்களை தரவரிசைப்படுத்தும் வெல்த்-எக்ஸ் (Wealth-X) இணையதளம் சொத்துகள், முதலீடு, லாபம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் உலகின் பெரும் செல்வந்தர்களை தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டு வருகின்றது.

அவ்வகையில், இந்த ஆண்டின் பட்டியலுக்காக சுமார் ஒரு லட்சம் தொழிலதிபர்களின் பொருளாதார நிலையை சீராய்வு செய்த வகையில் 87.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவன உரிமையாளரான அமனிக்கோ ஆர்ட்டெகா 66.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தையும், 60.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் முதலீட்டு நிறுவன உரிமையாளரான வாரென் பஃபெட் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் 42.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் ஏழாம் இடத்திலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் பிளூம்பர்க் 42.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் ஒன்பதாம் இடத்திலும் உள்ளனர்.

பிரபல வால்மார்ட் சங்கிலித்தொடர் வணிக வளாகங்களின் உரிமையாளரான அலைஸ் வால்ட்டன் என்ற பெண் தொழிலதிபர் 33.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் பதினைந்தாம் இடத்தை பெற்றுள்ளார்.

LEAVE A REPLY