தேக ஆரோக்கியத்தை மேம்படுத்தல் தேசிய வாரம்!

0
144

மேன்மைதங்கிய அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஆலோசணைக்கமைய தேக ஆரோக்கியத்தை மேம்படுத்தல் தேசிய வாரத்தினை முன்னிட்டு அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி அலுவலகமும், அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயமும் இணைந்து நடாத்திய உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் (26.01.2016) நேற்று முன்தினம் அந்-நூர் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

அந்-நூர் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல்.கே முஹம்மட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பளர் எம்.ஏ.சீ கஸ்ஸாலி, அட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எம் இஸ்மாயீல் மற்றும் ஆசிரியர்களும் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஒழுங்கு செய்யப்பட்ட உடற்பயிற்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

றியாஸ் ஆதம்

LEAVE A REPLY