முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுக்கு மீண்டும் சிறை!

0
250

படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து நீடிக்கப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டு வரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை (27.01.2016) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நான்கு பேரும் ஆஜர்படுத்தப்பட்டபோது பெப்ரவரி, 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவினை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா பிறப்பித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம்,இராணுவ புலனாய்வுத்துறையினை சேர்ந்த எம். கலீல் ஆகியோரே ஏனைய சந்தேக நபர்களாவர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ம் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்திற்குள் வைத்து நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

இந்த படுகொலை தொடர்பாக விசாரனைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வுத் பிரிவினரால் குறித்த சந்தேக நபர்களான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்டர்) மற்றும் ரெங்கசாமி கனகநாயகம் (கஜன் மாமா) ஆகியோர் கடந்த ஒக்டோபர் மாதம் 8ம் திகதியும் பிள்ளையான் ஒக்ரோபெர் 11ஆம் திகதியும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வருட (2016-ஜனவரி) ஆரம்பத்தில் இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரியான எம். கலீல் கைது செய்யப்பட்டிருந்தார்.

அப்துல்லாஹ்

5d72ec78-4315-4c36-b6ce-7a8cfd471a31 506acaac-03e8-4885-ac30-2213c0e4d33c b5ace873-bdc3-4fba-a6bc-c5aa491933e7

LEAVE A REPLY