சென்னை வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை காப்பாற்றிய யூனுசுக்கு பதக்கம்

0
182

சென்னை வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த யூனுசுக்கு தமிழக அரசு பதக்கம் வழங்கியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் திகதி அன்று சென்னையில் பெய்த கனமழையால் கடும் வெள்ளம் ஏற்பட்டது.

அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் பலரும் சிக்கித்தவித்த போது அவர்களை இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மீட்டனர்.

அன்று யூனுஸ் என்பவர், வெள்ளத்தில் சிக்கித் தவித்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் சித்ராவை மீட்டு பெருங்களத்தூர் மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு அவருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு சித்ரா–கணவர் மோகன் ஆகியோர் இணைந்து யூனுஸ் என்று பெயரிட்டனர்.

இந்நிலையில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் முகமது யூனுசின் தன்னலமற்ற தீர செயல்களை பாராட்டி அவருக்கு அண்ணா பதக்கம் வழங்கி தமிழக அரசு கவுரவித்துள்ளது.

யூனுசுக்கு பதக்கம் மற்றும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் சான்றிதழ்கள் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY