கடற்படையில் இணைந்துகொண்ட போது யோஷித்த போதிய கல்வித்தகைமையை கொண்டிருக்கவில்லை

0
295

2006 ஆம் ஆண்டு கடற்­ப­டையில் இணைந்து கொண்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் புதல்வர் அப்­போது போதிய கல்வித் தகைமையைக் கொண்­டி­ருக்­க­வில்லை என்று தேசிய பாது­காப்பு அமைச்சு நேற்று பாரா­ளு­மன்­றத்­திற்கு அறி­வித்­தது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அமர்­வின்­போது ஜே.வி.பி. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நலிந்த ஜய­திஸ்ஸ எழுப்­பிய கேள்­விக்கு பாது­காப்பு அமைச்­சினால் பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்­ப்பிக்­கப்­பட்­டி­ருந்த பதி­லி­லேயே மேற்­கண்­ட­வாறு அமைச்சு அறி­வித்­துள்­ளது.

முன்­ன­தாக கேள்வி எழுப்­பிய ஜய­திஸ்ஸ எம்.பி. 2001 ஆம் ஆண்டில் இலங்கை கடற்­ப­டைக்கு நிறை­வேற்றுப் பிரி­வுக்­காக பயி­லி­ளவல் உத்­தி­யோ­கத்­தர்கள் ஆட்­சேர்ப்பு செய்­யப்­ப­டு­கையில் கேட்­கப்­பட்­டி­ருந்த கல்வித் தகை­மைகள், லெப்­டினன்ட் வை.கே.ராஜக் ஷ NRX 2431 கொண்­டி­ருந்த கல்வித் தகைமை, உயர்­கல்­விக்குப் புறம்­பாக அவர் ஆட்­சேர்ப்­புக்கு உள்­வாங்­கப்­பட்ட விசேட காரணம், பாது­காப்பு அமைச்சின் அங்­கீ­காரம், அவர் கடற்­ப­டையில் இணைந்து கொண்ட திகதி, இற்­றை­வரை அவ­ருக்கு கிடைத்த வெ ளிநாட்டு புல­மைப்­ப­ரி­சில்கள், பயிற்­சிகள், வெ ளிநாட்­டி­லி­ருந்த காலப்­ப­கு­தியில் செல­வி­டப்­பட்ட பணம் உள்­ளிட்ட பல கேள்­வி­களை தொடுத்­தி­ருந்தார்.

இக் கேள்­விக்கு அளிக்­கப்­பட்ட பதிலில் மேலும் கூறி­யுள்­ள­தா­வது,

யோஷித்த ராஜ­பக் ஷ 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி இலங்கை கடற்­ப­டையின் நிறை­வேற்றுப் பிரி­வுக்­கான பயி­லுனர் உத்­தி­யோ­கத்­த­ராக இணைந்து கொண்டார். எனினும் அவர் இப் பத­வியை ஏற்றுக் கொள்­வ­தற்­கான கல்­வித்­தகை­மையைக் கொண்­டி­ருக்­க­வில்லை.

2006 ஆம் ஆண்டு மேற்­படி பதவி நிலைக்கு கோரப்­பட்­டி­ருந்த கல்வித் தகை மை­களின் படி கல்வி பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரத்தில் ஒரே அமர்வில் ஆங்­கிலம், சிங்­களம், கணிதம், விஞ்­ஞானம் அல்­லது தமிழ் (மாற்றுப் பாடங்கள் அல்­லது) உட்­பட ஆறு பாடங்­களில் திறமை சித்­தியும், உயர்­த­ரத்தில் வர்த்­தகம் அல்­லது விஞ்­ஞானப் பிரிவில் ஏதேனும் ஒன்றில் இரு பாடங்­களில் சித்தி என்­ப­னவே தகைமை­க­ளாகக் கோரப்­பட்­டி­ருந்­தன. எனினும் இப் பத­வியில் இணைத்துக் கொள்­ளப்­பட்­ட­வ­ரான யோஜித்த ராஷ­பக் ஷ 2003 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதா­ரண தரப்­ப­ரீட்­சையில் 6 திறமை சித்­தி­க­ளுடன், 8 பாடங்­களில் சித்­தி­ய­டைந்­திருந்த அதே­வேளை சிங்­கள பாடத்தில் அவர் சாதா­ரண சித்­தி­யையே பெற்­றி­ருந்தார்.

2004 ஆம் ஆண்டு இரண்­டா­வது அமர்­வி­லேயே அவர் ஆங்­கிலப் பாடத்தில் அதி திறமைச் சித்­தி­யையும், சிங்­கள பாடத்தில் திறமைச் சித்­தி­யையும் பெற்­றுள்ளார். மேற்­படி ஆட்­சேர்ப்­புக்கு தேவை­யான ஒரே அமர்வில் என்ற ரீதி­யி­லான தகை­மையின் பிர­காரம் அவர் சிங்­கள பாடத்தில் திறமைச் சித்தி பெற்­றி­ருக்­க­வில்லை.

அத்­துடன் அவர் உயர்­தர கலைப் பிரி­வி­லேயே இரு பாடங்­களில் திறமைச் சித்­தியைப் பெற்­றுள்ளார். எப்­ப­டி­யி­ருப்­பினும் 2006 டிசம்பர் 14 ஆம் திகதி யோஷித்த ராஜ­பக் ஷ இலங்கை கடற்­ப­டையின் நிறை­வேற்றுப் பிரிவில் பயி­லுனர் பிரி­வுக்கு உள்­வாங்­கப்­பட்டு 2008 டிசம்பர் 14 ஆம் திகதி வரை அடிப்­படைப் பயிற்­சி­களைப் பெற்­றுள்ளார்.

2006 காலப்­ப­கு­தியில் யோஷித்த ராஜ­ப­க் ஷவின் தந்­தையார் மஹிந்த ராஜ­பக் ஷ இந் நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக இருந்­தாலும் யுத்தம் இடம்­பெற்ற அக்­கா­லப்­ப­கு­தியில் இளை­ஞர்­களை படை­களில் இணைப்­பதை ஊக்­கு­விக்கும் வகையில் யோஷித்த ராஜ­பக் ஷ மேற்­படி பத­விக்கு இணைக்­கப்­பட்­ட­தாக கரு­தப்­ப­டு­கி­றது. மேலும் அப்­போ­தைய பாது­காப்பு அமைச்சு இதற்­கான அங்­கீ­கா­ரத்தை வழங்­கி­யது. மேலும் 2007 ஜன­வரி முதலாம் திகதி முதல் 2010 ஒக்­டோபர் 31 ஆம் திகதி வரையில் நான்கு வெ ளிநாட்டு புலமைப் பரிசில் மற்றும் கற்கை நெறி­க­ளுக்­காக சென்ற யோஷித்த ராஜ­ப­க் ஷ­விற்கு அர­சாங்­கத்தின் சார்பில் இரண்டு கோடியே 22 இலட்­சத்து 22 ஆயி­ரத்து 81.8 ரூபா செல­வி­டப்­பட்­டுள்­ளது.

எனினும் யுத்தம் இடம்­பெற்­ற­போது ஐந்து மாதங்­களே அவர் நாட்டில் இருந்தார். 2008 டிசம்பர் 14 இல் அடிப்­படைப் பயிற்­சி­களை முடித்துக் கொண்ட யோஷித்த ராஜபக் ஷ 2009 ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி பயிற்சியின் பொருட்டு உக்ரெனுக்கு செல்லும் காலப்பகுதி வரையிலேயே அவர் இலங்கையில் இருந்துள்ளார்.

இதேவேளை யோஷித்த ராஜபக் ஷவிற்கு எதிராக முன்வைக் கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கை ஜனாதிபதி செயலகத்துக்கு சமர்ப்பிக்கப்பட் டுள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

-VK-

LEAVE A REPLY