தஞ்சம் கோரிகளின் உடைமைகளை பறிமுதல் செய்ய டென்மார்க்கில் சட்டம்

0
151

தஞ்சக்கோரிக்கையாளர்களின் பெறுமதியான உடைமைகளை பறிமுதல் செய்யும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்று டென்மார்க் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

அகதிகளிடம் இருக்கும் 10,000 கிரோனருக்கு (1,450 டொலர்கள்) அதிகமான பணத்தை பறிமுதல் செய்ய அனுமதிக்கும் இந்த சட்டமூலத்திற்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. அகதிகளின் பராமரிப்பு செலவுக்காகவே இவ்வாறு பணம் பறிமுதல் செய்யப்படவிருப்பதாக டென்மார்க் அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்த சட்டம் அடிப்படை சொத்துரிமையை மீறுவதாக ஐரோப்பிய கவுன்ஸில் மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளன. டென்மார்க் அரசின் இந்த நடவடிக்கை இரண்டாம் உலகப் போர் காலத்தில் நாஜி ஜெர்மன், யூதர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ததோடு ஒப்பிட்டு சிலர் விமர்சித்துள்ளனர்.

கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த சட்டத்திற்கு அமைய தஞ்சக்கோரிக்கையாளர்களின் உடைமைகளை சோதனையிடவும் அனுமதிக்கப்படுகிறது.

இதில் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள், கைக்கடிகாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களின் பராமரிப்பு செலவுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

தவிர, அகதிகளின் குடும்பத்தினர் ஒன்றிணைவதை தாமதப்படுத்தும் மற்றுமொரு சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்றும் டென்மார்க் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY