தலைவலிக்கு காரணம் என்ன?

0
377

உடலில் சோர்வு, கண் விழிப்பு, மது போதை, ஜலதோஷம் என பல்வேறு காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது. தலைவலி ஏன், எதனால் ஏற்படுகிறது என்பது பற்றி மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரசில்லா சாரோன் இஸ்ரேல் கூறியது: தலையில் எந்த பகுதியில் வலி தோன்றினாலும் அதனை தலைவலி என்கிறோம். தலையின் நடுவிலிருந்து வலி பரவி எந்த திசைக்கும் செல்லும். வலி குத்தியது போன்றும், துடிப்பது போன்றும் பல நிமிடங்கள் முதல் பல மணி நேரம் வரை நீடிக்கும். சிலருக்கு சில நாட்கள் நீடிக்கிறது. 47 சதவீதம் மக்கள் தலைவலியை உணர்ந்துள்ளனர். இதை எதிர்காலத்தில் வரும் சுகவீனத்தின் அறிகுறியாக கருதலாம்.

காரணம் என்ன?

சைனசினால் ஏற்படும் அழர்ச்சி, கண் பார்வையில் ஏற்படும் தளர்வு, பல் சம்பந்தமான நோய் ஏற்படுவதால், மன அழுத்தம், தூக்கம் இன்மை, ஏதாவது அடி மற்றும் இடிபடுவதால், தட்ப வெட்ப மாற்றம், இரவில் பல் கடிப்பு இருந்தால், அதிக சப்தம் அல்லது வெளிச்சத்தை பார்க்கும் போது, ஹார்மோன்களில் பிரச்னை ஏற்படும் போது, தலையில் நோய் தொற்று, கட்டி, பக்கவாதம், ரத்தகுழாய்கள் வெடித்தாலும் தலைவலி ஏற்படும்.

வகைகள்

மன பாரத்தால் வருவதை டென்சன் தலைவலி என்பர். தலை, முகம், கழுத்து, காது போன்றவற்றில் தசை சுருக்கம் ஏற்படும் போது இவ்வகை தலைவலி வருகிறது. மாதத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை வரலாம்.

ஒற்றைத் தலைவலி

சைனஸ் தொந்தரவு உள்ளவர்களிடம் கட்டாயம் சைனஸ் தலைவலி இருக்கும். சைனஸ் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் வலி இருக்கும். நெற்றி, கன்னம், முதுகு தண்டு போன்றவற்றில் அழமாக தொடர் வலியாக இருக்கும். திடீர் என்று தலையை அசைக்கும் போதும், எதையாவது கூர்ந்து செய்யும் போதும் இவ்வலியுடன் மூக்கில் நீர் வடிதல், காது அடைப்பு, காய்ச்சல், முக வீக்கம் போன்றவை தென்படும்.

ஆண்களை மிரட்டும் கிளஸ்டர் தலைவலி

கிளஸ்டர் தலைவலியால் பெண்களை விட ஆண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். குத்தி விழுங்குவது போன்றும், எரிச்சலுடன் கண்ணை சுற்றி 30 நிமிடம் வரை காணப்படும்.

ஹார்மோன் தலைவலி

மாதவிடாய் காலங்களில் சிலருக்கு முன்கூட்டியே தலைவலி வருகிறது. ஒற்றைத் தலைவலியும் வரலாம். ஒரு பக்கம் வலி குடைவது போன்று காணப்படும். தலை கர்ப்ப காலத்திலும், மாதவிடாய் நிற்கும் காலத்திலும் ஏற்படும்.

விளைவுகள்

வாந்தி வருவது போன்றும், தொண்டை வறட்சி, கண் சிவந்தோ, இமை மூடியோ காணப்படும். அதிகரத்த அழுத்தம், கட்டி, வலுவிழந்த ரத்த நாளங்களாலும், கிட்னியில் பிரச்னை, உணவு குழாய் பிரச்னை போன்றவை ஏற்படும்.

கண்டறியும் முறை

மோசமான நோய்களின் தாக்கத்தால் வரும் தலைவலியா என்பதனை கண்டறிய எக்ஸ்ரே, சி.டிஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ (மூளை தண்டு வடத்தில், ரத்த நாளத்தில் உடைவு, நோய் தொற்று, கட்டி, சைனஸ் போன்றவைகளை கண்டு பிடிக்க) ரத்த பரிசோதனை.

சிகிச்சை

நல்ல ஓய்வு, வலி நிவாரணி மருந்து, மன அழுத்தத்திற்கு எதிரான மருந்து, காக்கா வலிப்பிற்கான மருந்து மற்றும் பீற்றா பிளாக்கர்ஸ் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப் படி எடுக்கலாம்.

LEAVE A REPLY