துருக்கி அருகே குடியேறிகளின் படகு கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலியானதாக தகவல்

0
177

துருக்கி அருகே குடியேறிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும், கனடாவிற்கும் சட்டவிரோதமாக செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் கடல் மார்க்கமாக உரிய ஆவணம் இல்லாமல் ஏஜண்டுகள் மூலமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ படகு மூலம் தப்பிச் செல்கின்றனர்.

இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக, இன்று துருக்கியில் இருந்து கிரீஸ் நோக்கி சென்று கொண்டிருந்த படகு ஒன்று துருக்கியின் தெற்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் 5 குடியேறிகள் கடல் நீரில் மூழ்கி பலியானார்கள். மேலும் 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை துருக்கி கடற்படையினர் மற்றும் விமானப் படையினர் மீட்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY