அமெரிக்க வங்கிகளில் ஒரு டொலரேனும் இருந்தால் எனது கழுத்தை அறுத்து உயிர்துறப்பேன்

0
266

நல்லாட்சியாளர்கள் எமது குடும்பத்தை ஆசியாவிலேயே செல்வந்தர் குடும்பமாக வர்ணிக்கின்றனர். அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் ஒரு டொலரேனும் வைப்பிலிடப்பட்டுள்ளதை நிரூபித்தால் “எனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்துறப்பேன்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.

பாணந்துறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அரச தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர். அமெரிக்க வங்கியில் எனது பெயரில் ஒரு அமெரிக்க டொலர் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிரூபித்தால் எனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்துறப்பேன். முடிந்தால் அரசு தரப்பினர் இதனை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றும் சவால் விடுகின்றேன்.

-ET-

LEAVE A REPLY