சிறுவர்களில் உடற்பருமன் 33% அதிகரிப்பு: காரணங்களை வெளியிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம்

0
254

சர்க்கரை கலந்த குடிபானங்கள் காரணமாக ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் உள்ள சிறுவர்களில் அரைவாசிப்பேர் 5 வயதாவதற்கு முன்னரே உடற்பருமனால் அவதியுறுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, சர்க்கரை கலந்த ஆரோக்கியமற்ற குடிபானங்களை சந்தைப்படுத்துவதைக் கட்டுப்படுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

முதற்கட்டமாக, சர்க்கரை கலந்த குடிபானங்கள் மீது அரச வரிகளை விதிக்குமாறு அந்நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

குழந்தைப் பருவத்தில் உடற்பருமனைக் குறைப்பதற்கான முக்கியத்துவம் குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

1990 முதல் உலக அளவில் அதிக எடை கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 33 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறுவர்கள் வெளியில் சென்று விளையாடுவதைத் தவிர்த்து, இணைய விளையாட்டுக்களில் அதிக நேரம் செலவிடுவதால் அவர்களுக்குத் தேவையான உடற்பயிற்சி இல்லாமற்போவதும் உடற்பருமனுக்கான மற்றொரு காரணம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY