ஹார்ட் அட்டாக் வராது என்று நினைக்க வேண்டாம்!

0
265

* நான் இளைய வயதை கொண்டவன் அதனால் நான் இருதய நோயினைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்ற எண்ணம் வேண்டாம். சிறு வயதிலும், இளம்பருவத்திலும் கூட ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். அதுவும் குண்டாக இருக்கும் இள வயதினருக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

* எனக்கு ரத்த கொதிப்பிற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆகவே எனக்கு ரத்த கொதிப்பு இல்லை என்று நினைக்க வேண்டாம். சத்தமின்றி ஆளை கொல்லும் பாதிப்புகளில் ஒன்று ரத்த கொதிப்பு. எந்த அறிகுறியும் இன்றி ஒருவருக்கு இது பல காலம் இருக்கலாம். திடீரென கடும் பாதிப்பினை ஏற்படுத்தலாம். எனவே அடிக்கடி ரத்த அழுத்தத்தினை பரிசோதித்துக் கொள்வது நல்லது.

* ஹார்ட் அட்டாக் என்றால் நெஞ்சு வலி இருக்கும். ஆகவே நெஞ்சு வலி இல்லாமல் ஹார்ட் அட்டாக் வராது என்று நினைக்க வேண்டாம். பொதுவாக ஹார்ட் அட்டாகின் பொழுது நெஞ்சு வலி ஏற்படும் என்றாலும் அது இல்லாமல் மூச்சு முட்டல், வயிற்று பிரட்டல், தோள் வலி, முகவாய், கழுத்து, முதுகு இவற்றில் வலி ஏற்படலாம். ஆக உடனடி மருத்துவ உதவி பெறுவது அவசியம்.

* சர்க்கரை நோயாளியாக இருந்தாலும் சர்க்கரை நல்ல கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் எனக்கு இருதய நோய் வராது என்ற அசட்டு தைரியம் வேண்டாம்.

* என் குடும்பத்தில் அநேகருக்கு இருதய பாதிப்பு இருக்கின்றது. அதனால் எனக்கு கண்டிப்பாய் வந்தே தீரும் என்ற கவலையும் வேண்டாம். இத்தகு கவலை உண்மைதான் என்றாலும் பல தீர்வு வழிகளை உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி பின்பற்றினால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

LEAVE A REPLY