மு.கா.விலிருந்து வெளியேறமாட்டேன்: ஹஸன் அலி திட்டவட்டம்

0
251

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கும் எனக்கும் இடை­யி­லான உறவு தொப்புள் கொடி உறவை விட பல­மா­ன­தாகும். என்னை எவ­ராலும் வெளியே தள்ள முடி­யாது. நான் கட்­சிக்கு இடையில் வந்து சேர்ந்­த­வ­னல்ல.

தொடர்ந்தும் கட்­சி­யு­ட­னேயே இருப்பேன் என முன்னாள் இரா­ஜாங்க அமைச்­சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லா­ள­ரு­மான எம்.ரி. ஹஸன் அலி தெரி­வித்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மைத்­து­வத்­துக்கும் செய­லாளர் ஹசன் அலிக்கும் இடையில் முரண்­பா­டுகள் நில­வு­வ­தாக தெரி­விக்­கப்­பட்டு வரும் நிலையில் அது பற்றி வின­வி­ய­போதே ஹசன் அலி இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்:
‘மறைந்த தலைவர் அஷ்­ரபின் காலத்தில் கிழக்கில் 16 ஆயுதக் குழுக்கள் இயங்கி வந்த சந்­தர்ப்­பத்தில் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளி­ட­மி­ருந்து நான் அடி வாங்­கி­யுள்ளேன்.

அன்று பல சவால்­க­ளுக்கு மத்­தியில் பாது­காத்து வந்த கட்­சியே முஸ்லிம் காங்­கிரஸ். எனக்கும் கட்­சிக்கும் இடை­யி­லுள்ள உறவு சட்­டத்­துக்கும் அப்­பாற்­பட்­டது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மக்­க­ளுக்­கு­ரிய கட்சி. வடக்­கிலும் கிழக்­கிலும் வட கிழக்­குக்கு வெளி­யிலும் அஷ்­ரபின் சிந்­த­னை­யு­ட­னேயே இயங்கி வரு­கி­றது.

கட்­சியில் நீ தான் இருக்க வேண்டும் அல்­லது இருக்க முடி­யாது என்று கட்­டுப்­ப­டுத்த முடி­யாது.

தேசியப் பட்­டியல் நிய­மனம் எம்.எஸ். தௌபீக்­குக்கு வழங்­கப்­பட்­ட­தற்கும் எனக்கும் எந்தப் பிரச்­சி­னை­யு­மில்லை.

நான் அதனை எதிர்க்­க­வு­மில்லை. கட்சிக்கும் எனக்கும் ஆத்ம தொடர்பு இருக்கிறது. நான் கட்சியுடனேயே தொடர்ந்தும் இருப்பேன் என்றார்.

-Vidivelli-

LEAVE A REPLY