பிரசாந்தனுக்கும் தமையனுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

0
97

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் 2008ம் ஆண்டு இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்புடைய சந்தேக நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயலாளர் பூ. பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரன் ஹரன் ஆகியோருக்கு தொடர்ந்தும் இரு வாரங்களுக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அரசாங்க பாடசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு வாக்கு மூலமொன்றை அளித்திருந்ததன் பேரில் இவர்கள் இருவரும் காத்தான்குடிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் செவ்வாயன்று மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தி;ல் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 09ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி . எம். கணேசராசாவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அப்துல்லாஹ்

LEAVE A REPLY