வயிற்றில் கல் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு!

0
242

திருகோணமலை – சம்பூர் பிரதேசத்தில் வயிற்றில் பெரிய கல் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவரது சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

சம்பூர் 7ஆம் பிரிவு பகுதியில் உள்ள கிணற்றிலிருந்தே 6 வயதுடைய குகதாஸ் தர்ஷன் என்ற சிறுவனது சடலம் மீட்கப்பட்டதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

1ம் தரத்திற்கு இவ் வருடமே சேர்க்கப்பட்ட இவர், தனது சகோதரனுடனும் பக்கத்து வீட்டிலுள்ள சிறுவனுடனும் நேற்று திங்கட்கிழமை மாலை 04.00 மணியளவில் விளையாடச் சென்றுள்ளார். பின்னர் பக்கத்து வீட்டு சிறுவன் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். மேலும் உயிரிழந்த சிறுவனின் சகோதரன் கடைக்குச் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தின் பின் உயிரிழந்த சிறுவனின் தாய் பிள்ளையை தேடியுள்ளார். மாலை 05.30 ஆகியும் பிள்ளை வீடு வராமையால் சம்பூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பின் பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து சிறுவனை தேடிய போது அவர் இறந்த நிலையில் கிணறு ஒன்றுக்குள் கிடந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக சம்பூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-ET-

LEAVE A REPLY