ஏழு ஸாஹிறா கல்லூரிகள் இணைந்து Zahira Network Camp யினை உறுவாக்கியது.

0
108

இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள 7 ஸாஹிராக் கல்லூரிகள் இணைந்து Zahira network camp ஒன்றினை அண்மையில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் ஒழுங்கு செய்திருந்தது.

கொழும்பு , கல்முனை , கம்பளை , புத்தளம் , மாத்தளை , அழுத்கம மற்றும் மாவனெல்ல போன்ற இடங்களிலுள்ள ஸாஹிராக் கல்லூரிகள் கலந்து கொண்டன.

ஒவ்வொரு கல்லூரிகளிலிருந்தும் ஒரு ஆசிரியர் 09 மாணவர்கள் உட்பட 10  பேர் வீதம் மொத்தம் 70 பேர் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.

இலங்கையிலுள்ள ஸாஹிராக் கல்லூரிகளுக்கிடையில் வலைப்பின்னல் ஒன்றை ஏற்படுத்தி கல்வி , விளையாட்டு ,புறக்கிருத்திய செயற்பாடுகள் , இஸ்லாமிய அடிப்படையிலான கலாச்சார விழிமியங்கள் போன்றவற்றினூடான தலைமைத்துவ பயிற்சியினை கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்.

இந் நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு பல வர்த்தக நிறுவனங்கள் அனுசரணை வழங்க முன்வந்துள்ளன.

அஹமட் இர்ஸாட்

LEAVE A REPLY