(Poem) நஞ்சானது வாழ்க்கை!

0
98

imagesகொஞ்சம் கொஞ்சமாக
குறைகிறது ஆரோக்யம்
நஞ்சான பொருட்களினால்
நசிகின்றது வாழ்க்கை

சீனியை வெண்மையாக்க
சேர்க்கின்ற பதார்த்தங்கள்
பாணைப் பெரிதாக்க
பாவிக்கும் தந்திரங்கள்
மேனியை மினுக்குவதற்கு
மிருகக் கொழுப்பு கிறீம் பூசல்
வீணாக ஆரோக்கியம்
விழுகின்ற காரியங்கள்
.
அடிக்கின்ற நாசினியால்
ஆகாரம் நஞ்சாச்சு
உடுக்கின்ற உடுப்பிலும்
ஒவ்வாத கெமிக்கல்கள்
குடிக்கின்ற மருந்தாலும்
குலைகிறது ஆரோக்யம்
படுக்கின்ற மெத்தையிலும்
பல்வேறு ரசாயனங்கள்

பொலித்தீனால் அரிசி
போமலினில் போட்ட மீன்
கோழித்தீன் தின்று
கொழுத்த புறொய்லர்கள்
மலத்தீனீல் வளர்ந்த
மரக்கறி பழ வகைகள்
உளத்தையும் உடலையும்
உருக்கிக் கருக்கி விடும்.

கணக்கின்றி போண் பர்த்து
கண்பார்வை குறைகிறது
மணிக்கணக்கில் சற் பண்ணி
மன உளைச்சல் வருகிறது
நுனி விரலால் டச் பண்ணி
நோகிறது கை விரல்கள்
இனி வரும் காலங்கள்
இன்னும் மோசமாகும்.

வான வெளி நஞ்சாச்சு
வளர்கின்ற தொழிற்துறையால்
வாயு வெளி நஞ்சாச்சு
வாக்னத்தின் கரிப் புகையால்
தூய தண்ணீர் நஞ்சாச்சு
தொடரான கழிவுகளால்
ஆயுள் பாதி முடியிமுன்னெ
ஆரோக்யம் கெடுகிறது.

(MOHAMED NIZOUS)

LEAVE A REPLY