சிறுநீரக மோசடி விசாரணைகளை ஆரம்பிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை

0
236

சிறுநீரக மோசடி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பிலான விசாரணைகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு, மேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு, இளங்கக்கோன் உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜீ.மஹிபாலவின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY