(Video) எம்பிலிபிடிய சம்பவம்; CCTV காட்சிகள், சம்பவத்தின் போது அங்கிருந்தவர் கூறும் கருத்துக்கள்

0
343

cctv imageஅண்மையில் எம்பிலிபிடிய பகுதியில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 29 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

பொலிஸார் அந்தப் பகுதி வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு சென்று மதுபானம் கோரியமையை அடுத்தே குறித்த முரண்பாடு ஏற்பட்டதாகவும், பின்னர் அங்கிருந்தவர்களைத் தாக்கிய பொலிஸார் ஒருவரை (உயிரிழந்த நபரை) மாடியில் இருந்து தள்ளிவிட்டதாகவும் மக்கள் குறிப்பிட்டனர்.

எனினும் அந்தப் பகுதியில் சிலரால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்தே பொலிஸார் அங்கு சென்றதாக பொலிஸாரின் தரப்பில் குறிப்பிடப்பட்டது.

இந்தநிலையில், பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் சில காட்சிகள் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கெமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. அத்துடன், சம்பவத்தின் போது அங்கிருந்த ஒருவர் தெரிவிக்கும் கருத்துக்களையும் கீழுள்ள காணொளியில் காணலாம்.

(பேசும் நபரின் கருத்துக்கள் கீழே தமிழில் மொழி பெயர்கப்பட்டுள்ளது)

“நான் தான் இந்த வீட்டில் இடம்பெற்ற நிகழ்வை காலை முதல் வீடியோ எடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டேன். நான் எனது வேலையை முடித்து விட்டு இரவு 11.00 மணியளவில் பேன்ட் அருகில் சென்றேன்.

அப்போதுதான் பொலிஸ் ஜீப் வந்து நின்றது. பின் பொலிஸார் மூவர் படியால் ஏறி வந்தனர். பின் படியில் இருந்த சிலருடன் அவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பின்னர் இரு குழுவினரும் இரு பக்கம் சென்றனர். பின் சுமார் 30 நிமிடங்களுக்கும் குறைவான காலப் பகுதியில் மூன்று பொலிஸ் ஜூப் வந்தது, அதில் இருந்து சுமார் 30 பேர் வரை வந்தனர், அனைவரும் சிவில் உடையில் இருந்தனர்.

ஏ.எஸ்.பி யும் வந்தார் அவரும் சிவில் உடையில் இருந்தார், பின் நான் எனது பாதுகாப்புக்காக… இந்த கட்டிடத்தின் 3ம் மாடியில் தான் எனது கடை உள்ளது, நான் உள்ளே வந்து மின் விளக்குகளை அனைத்து விட்டு கதவை மூடிக் கொண்​டேன்.. பின்னர் உள்ளிருந்த எனக்கு பெண்கள் கத்தும் சத்தம் கேட்டது, எனக்கு அடிக்காதீர்கள், காப்பாற்றுங்கள் என்பது போன்ற சத்தங்கள் கேட்டன.

பின்னர் 15 மற்றும் 20 நிமிடங்கள் கழித்து மேலே மூவர் ஓடிவரும் சத்தம் கேட்டது… இதன்போது ஒருவர் அடிபட்டு கண்ணாடி உடைவது போன்ற சத்தம் கேட்டது

பின்னால் வந்தவர் என்ன என வினவியபோது மற்றையவர் இனி பயனில்லை அவன் இரத்தத்தில் வீழ்ந்து கிடக்கிறான் என்றார்.

நான் பயத்தில் கதவை திறந்து வௌியே வரவில்லை ஒரு மணி நேரம் வரை உள்ளே இருந்து விட்டு பின் தான் வௌியே வந்தேன், பிறகுதான் தெரிந்தது சுமித்தை பொலிஸார் தள்ளி விட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக…

நான் பொலிஸ் மா அதிபரிடம் கோறுவது ஒன்றுதான் நீங்கள் வேறு விடயங்களுக்கு நீதியை பெற்றுத் தருவதாக கருத்து வௌியிடுவீர்கள் ஏன் இது குறித்து மௌனமாக உள்ளீர்கள்… நாம் உரிய நடவடிக்கை எடுப்போம் என்றாவது கருத்தை வௌியிடுங்கள்…

மேலும் ஒன்று கூற விரும்புகிறேன், இங்கு பிரச்சினை ஏற்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர் ஆனால் நாம் ஒரு தாய் பிள்ளைகள் போன்றே சந்தோஷமாக இருந்தோம். நீங்கள் சொல்வது போல பிரச்சினை எதுவும் இருக்கவில்லை..”

(அத தெரண)

LEAVE A REPLY