பந்துவீச்சில் என்னை மிரள வைத்தவர்கள் யார் தெரியுமா? மனம் திறந்த சங்கக்காரா

0
936

அவுஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 தொடரில் விளையாடிய குமார் சங்கக்காரா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த சில விடயங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், முன்னணி துடுப்பாட்ட வீரருமான சங்கக்காரா பிக் பாஷ் டி20 தொடரில் ஹொபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடினார்.

இந்நிலையில் மெல்போர்னில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் சங்கக்க்காராவும் கலந்து கொண்டார்.

இதில் பேசிய சங்கக்காரா, ஜெயவர்த்தனே உடன் ஜோடி சேர்ந்து சாதனை ஓட்டங்கள் எடுத்தது பற்றியும், ஆரம்ப கட்டத்தில் ஒரு துடுப்பாட்ட வீரராக அணியில் தாக்குபிடிக்க பட்ட கஷ்டத்தினையும் பற்றி பேசியுள்ளார்.

மேலும், இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளரான ஜாகீர் கான், அவுஸ்திரேலியாவின் ஷேன் வார்னே ஆகியோர் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியதாக குறிப்பிட்டுள்ளார்.

தனது 5வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் 98 ஓட்டங்களை குவித்தது மறக்க முடியாது என்று நினைவு கூர்ந்த சங்கக்காரா, மேற்கிந்திய தீவுகளின் விவ் ரிச்சர்ட், பிரையன் லாரா ஆகியோர் தனக்கு பிடித்த வீரர்கள் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY