விரைவில் விற்பனைக்கு வரும் அப்பிள் ஐபோன் 5Se

0
244

அப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 5Se மாடலை மார்ச் மாதம் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
6S மொடலுக்கு பிறகு அப்பிள் நிறுவனம் தனது புதிய மொபைல் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுவந்தது.

ஐபோன் மினி, ஐபோன் 6C, ஐபோனின் பட்ஜெட் மொபைல் என்று பலவிதமான பெயர்களில் அந்த மொபைல் அழைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிகழ்வில் அப்பிள் நிறுவனம் தனது புதிய மொபைலை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இதற்கு ஐபோன் 5Se (Special edition) என்று பெயரிடப்பட்டுள்ளது.

4 இன்ச் தொடுதிரை வசதியுடம் தயாரிக்கப்பட்டுள்ள இது ஐபோன் 6 போன்று வட்ட வடிவ முனைகளை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முந்தைய ஐபோன் 5 மொடலின் வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள இதில் 6 மற்றும் 6s மொடல்களின் சில அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

8 MP முன்புற கமெரா 1.2 MP பின்புற கமெரா ஆகிய வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சில்வர், ஸ்பேஸ் கிரே, ரோஸ் கோல்ட் நிறங்களில் இது கிடைக்கும்.

இதனுடன் அப்பிள் கைகடிகாரம், ஐபேட் Air3 ஆகியவையும் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இது தொடர்பான அப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பதால் இது வதந்தியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY